இரு வெதுப்பகங்களுக்கு 160,000 ரூபாய் அபராதம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இரு வெதுப்பகங்களுக்கு 160,000 ரூபாய் அபராதம்

கொக்குவிலில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு வெதுப்பங்களுக்கு ஒரு இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் புதன்கிழமை (03) நடந்த வழக்கு விசாரணையில் இரு வெதுப்பகங்களின் உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொக்குவிலில் கடந்த மாதம் 12ஆம் திகதி சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு வெதுப்பகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை அவதானிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஒரு வெதுப்பகத்தை திருத்தவேலைகள் முடியும்வரை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மற்றைய வெதுப்பகம் திருத்தப் பணிகளை செய்து தொடர்ந்து இயங்க அனுமதித்து வழக்கு நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இரு வெதுப்பகங்களும் திருத்தப் பணிகளை முழுமை செய்துள்ளன என்பதை பொது சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, இரு வெதுப்பக உரிமையாளர்களுக்கும் நீதிமன்றம் தலா 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

இரு வெதுப்பகங்களுக்கு 160,000 ரூபாய் அபராதம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)