இரு ஊடகவியலாளர்களை எரிபொருள் நிலையமுகாமையாளர் தாக்கினார். வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில், எல்லா அத்தியாவசியப் பொருட்களுக்கும், எரிபொருள்களுக்கும் பல மாத காலமாக தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகனங்களையே நம்பி தமது வாழ்க்கையை வாழும் மக்களின் நிலைமை பல மணிநேரம் வெய்யில், மழை என்றும் பாராது வரிசையில் இலவு காத்த கிளிபோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தூங்கி நின்று திரிம்பிப் போவதை அறிந்து கொள்ளும் முகமாகவும், அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கத்துடன் விரைந்த இரு ஊடவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் வவுனியா பகுதியில் சனிக்கிழமை (30) ஒரு எரிபொருள் நிலையத்துக்குச் சென்ற கதீலன் மற்றும் சஜீபன் ஆகிய இரு ஊடகவியலாளர்களின் மீது, அவ்வெரிபொருள் நிலைய முகாமையாளரும், சக ஊழியர்களும் எதிர்பாராத முகமாகத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலினால் படுகாயமடைந்த இரு ஊடவியலாளர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு ஊடகவியலாளர்களை எரிபொருள் நிலையமுகாமையாளர் தாக்கினார். வைத்தியசாலையில் அனுமதி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY