
posted 19th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இராணுவத்தினரால் மாலை நேர கல்வி திட்டம் நடாத்த ஏற்பாடு
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலர் பிரிவின் பொலிகண்டி J 394 கிராம சேவகர் பிரிவிலுள்ள பொருளாதார நிலையில் பின்தங்கிய 120. மாணவர்களுக்கான மாலை நேர கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இன்று (19) காலை 09:45 மணியளவில் பொலிகண்டி தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஒன்று கூடல் மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டு கலந்துரையாடல் இடம் பெற்றது.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனர்ல் ரவி ரத்னசிங்கத்தின் நிதி பங்களிப்பில் இடம் பெறவுள்ள குறித்த மாலை நேர கல்வி செயற்பாடு ஆரம்பித்தல் உரையாடல் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் குணரத்ன, தலைமையில் இடம் பெற்றது.
551 பிரகேட் கொமாண்டர் பிரிகேடியர் காரிய கரவண, மற்றும் இராணுவ அதிகாரிகள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் ஈ. தயாரூபன், பருத்தித்துறை உதவி பொலீஸ் அத்தியட்சகர் தயான இலங்க கோன், வலய கல்வி பணி்பாளர் சத்தியபாலன், கரவெட்டி பிரதேச செயலர் ஈ. தயாபரன், ஹாட்லில் கல்லூரி முன்னாள் அதிபர் மு. சிறிபதி, மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)