
posted 16th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா
மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வியாழன்காலை இடம் பெற்றது.
ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவல்கட்டு வட்டார அமைப்பாளர் ந.கவிச்சந்திரன், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரும் கலந்துகொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)