இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மக்கள் வங்கியில் இருந்து நான் கடன் பெற்றுக் கொண்டு, ஒரு சதமேனும் மீளச் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் அவரது கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர்களுள் ஒருவருமான தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறையிலுள்ள அவரது காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நால்லாச்சி அரசாங்க காலத்தில் மக்கள் வங்கியில் இருந்து நான் அதிக தொகை கடன் பெற்றதாகவும் அதில் ஒரு சதமேனும் மீளச் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. என் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் ஊடக சந்திப்பொன்றிலும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் பேசியதற்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பது போல் ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து நான் கடன் பெற்றதில்லை. நல்லாட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது கடன் பெற்றதாக கூறியுள்ள சாணக்கியன் தற்போது ரணில் பிரதமராக பதவியேற்றதும் அந்த கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

என்னை திருடர் என தெரிவிப்பதன் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் எனக் கூற அவர் முயற்சிக்கின்றார். எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் சாணக்கியன் என் மீது அபாண்டம் சுமத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக என்னை இவ்வாறு அவர் கூற முடியுமா? இதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றேன். எனவே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY