இரவோடிரவாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களின் விலை - மண்ணெண்ணையில் மனிதாபிமானம் ..

நாட்டில், திடீரென இன்று அதிகாலை மூன்று மணி முதல் எரிபொருட்களுக்கான விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவு சுமையாலும், பொருளாதார வீழ்ச்சியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள இலங்கை மக்களுக்கு மீண்டும் எரிபொருள் விலையேற்ற அறிவித்தல் பேரிடியாகவே அமைந்துள்ளதுடன் மக்களைப் பெரும் கொதிப்படையவும் செய்துள்ளது.

இன்று அதிகாலை மீண்டும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் படி 1 லீற்றர் 92 ரக ஒக்டென் பெற்றோல் 338 ரூபா விலிருந்து 420 ரூபாவாகவும், 95 ரக பெற்றோல் 373 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 1 லீற்றர் 289 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 329 ரூபாவிலிருந்து 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பெரும் இன்னல்களை அனுபவிப்பதுடன், எரிபொருள் தட்டுப்பாட்டினால் நீண்ட கியூ வரிசை யுகத்தை அனுபவிக்கும் நிலையிலும், மீண்டும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை பெரும் விமர்சனைங்களை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

மரத்தால் விழுந்தவனை, மாடு ஏறிமிதித்த கதையாக இந்த எரிபொருள் விலை உயர்வு அமைந்துள்ளதென்றும், புதிய பிரதமரின் சாதனை இந்த அதிகாலை 3 மணி விலை உயர்வு என்றும் பொது மக்களின் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரின் நலன் கருதி மண்ணெண்ணை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமலிருக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இரவோடிரவாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களின் விலை - மண்ணெண்ணையில் மனிதாபிமானம் ..

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY