இரணைமடுக்குளத்து விவசாயிகளின் ஆதங்கம் - தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒதுக்கி முடிவெடுக்க முடியாது - அரச அதிபர்

விவசாயிகளின் அழுத்தம் காரணமாகவும், அண்மையில் மேலதிகமாக கிடைக்கப்பெற்ற மழை காரணமாக கிடைக்கப்பெற்ற நீர்மட்டத்தை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் சரியான நீர் முகாமைத்துவத்தை அடிப்படையாக கொண்டும், இரணைமடுக்குளத்தின் கீழ் 16,211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான குறிப்பிட்ட சில விவசாயிகளுடன் நேற்று முன் தினம் சனிக்கிழமை மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் சிறு போக பயிர்ச்செய்கைக்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் நடைபெற்று பயிர்செய்கை அளவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக அதிகளவான நிலப்பரப்புகளை கொண்ட விவசாயிகள் தங்கள் நீர் பங்குகளை அதிகரித்துத் தருமாறு கோரியிருந்தனர். அதற்கமைவாக மேலதிகமாக 426 ஏக்கர் இணைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் இரணைமடுக்குளத்தின் கீழ் 16,211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாயிகளின் அழுத்தம் காரணமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளதுடன், அண்மையில் மேலதிகமாக கிடைக்கப்பெற்ற மழை காரணமாக குளத்தின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டும், விவசாயிகள் சரியான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையிலும் குறித்த பயிர்ச் செய்கை அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஏனைய தேவைகளையும் கணக்கிட்டு அதன்படியே விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை புறந்தள்ளி எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க முடியாது என்றார்.

இரணைமடுக்குளத்து விவசாயிகளின் ஆதங்கம் - தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒதுக்கி முடிவெடுக்க முடியாது - அரச அதிபர்

எஸ் தில்லைநாதன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More