
posted 16th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும்
இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும் இன்று பரந்தன், பன்னங்கண்டி பகுதிகளில் நடைபெற்றது.
கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சியில் விவசாயிகள் கமநலசேவை திணைக்களத்தினர், விவசாய போதனாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் இதன் போது கூறுகையில்,
இயந்திரம் மூலம் நாற்று நடுகையில் பெறப்படுகின்ற விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 150 புசலாக கிடைக்கும்.
ஆனால், சாதாரணமாக வீச்சு விதைப்பில் 120 புசலாகவே கிடைப்பதாகவும், நாற்று நடுகையினால் அதிகளவிலான விளைச்சலைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பயிர்ச் செய்கையின் போது குறைந்த அளவிலான உரங்களையே பயன்படுத்துவதாகவும், விதைப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7kg நெல் போதுமானது என்பதால் குறைந்த செலவில் அதிகளவிலான விளைச்சலை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)