'இப்தார்' நிகழ்வு ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் உண்டுபண்ணுகின்றது - மௌலவி எஸ்.ஏ.அசீம்

இஸ்லாமியர் றம்லான் காலத்தில் நோம்பு இருப்பது மற்றையவர்களின் பசியை உணர்ந்து கொண்டு நன்மை செய்யவும், பொது அமைப்புக்களில் 'இப்தார்' நிகழ்வை நடாத்துவது யாவரும் ஐக்கியமுள்ள புரிந்துணர்வுள்ள சமூகம் ஒன்றை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கிலேயேதான் இவ் 'இப்தார்' நிகழ்வு நடைபெறுகின்றது என மன்னார் நகர் மூர்வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவியும், மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.ஏ. அசீம் இவ்வாறு தெரிவித்தார்.

சனிக்கிழமை (30.04.2022) அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற 'இப்தார்' நிகழ்வில் மௌலவி எஸ்.ஏ. அசீம் தொடந்து இங்கு உரையாற்றுகையில்;

இஸ்லாமிய நாட்காட்டியிலே இது எமக்கு ஒன்பதாவது றம்லான் மாதமாகும்.

முதல் தலை பிறையை பார்த்ததிலிருந்து இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதம் தலை பிறையை பார்க்கும் வரைக்கும் இஸ்லாமிய மக்கள் நோம்பை கடைப்பிடிப்பது கடைமையாகும்.

இந்த நோம்பானது மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தில் நோம்பு நோக்குவோருக்கு புலன் அடக்கம் தேவையென வலியுறுத்தப்படுக்கின்றது.

அதிகாலை 4.40 லிருந்து சூரியன் அஸ்தமிக்கும் 6.24 மணிவரை சுமார் 14 மணி நேரம் உண்ணாமல், நீர் அருந்தாமல் இறைவனுக்காக பசி, பட்டினியுடன் இருந்து தனது ஆன்மாவை அடக்கி வாழும் காலம் இதுவாகும்.

இந்த பசியை உணர்வதன் மூலம், ஏழை மற்றும் வறுமை கோட்டுக்குள் வாழும் மக்களுக்கு உதவுகின்ற தன்மையை நோம்பு இருப்பவர்களுக்கு இறைவன் எற்படுத்துகின்றான்.

இதனால்தான் இந்த காலத்தில் ஏழைகளுக்கு அதிகமாக உணவு வழங்கி பராமரிக்கும் செயல்பாடுகளை நாம் காண்கின்றோம்.

இவ்வாறு இந்த நோம்பை திறக்கின்ற நிகழ்வைத்தான் அரபில் 'இப்தார்' என அழைக்கின்றோம்.

இறைதூதர் கூறுகின்றார், “நோம்பை திறக்கின்ற மனிதனுக்கு உதவிகள் யார் செய்கின்றார்களோ நோம்பு பிடிக்கின்ற மனிதனுக்கு என்ன நன்மை கிடைக்கின்றதோ அது உதவி செய்கின்றவனுக்கும் கிடைக்கின்றது” என இறைதூதர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

இந்த நன்மையை அடைவதற்குத்தான் வசதி படைத்தவர்கள் தனவந்தர்கள் போன்றோர் தங்கள் வீடுகளில், பள்ளிவாசல்களில் இவ்வாறான உதவிகளை மேற்கொள்ளுகின்றனர்.

பொது அமைப்புக்களில் எமது கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு செய்யப்படும் இவ் 'இப்தாரின்' நோக்கம் மற்றவர்களின் கலாச்சாரம் பண்புகளை அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அடுத்த சமூகத்துக்கு இவ்வாறான பண்புகள் கடத்தப்பட வேண்டும் எனவும், இதனால் ஐக்கியமுள்ள புரிந்துணர்வுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கிலே இவ் 'இப்தார்' நிகழ்வு நடைபெறுகின்றது.

இதன் அடிப்படையிலேயே மன்னார் மாவட்டத்தில் மிகவும் சமூக பொறுப்புள்ள இன, மதம் பேதமின்றி செயல்படும் இந்த மன்னார் பிரஜைகள் குழுவில் நாம் இந்த 'இப்தாh'; நிகழ்வை நடாத்துகின்றோம்.

இதன் மூலம் எமது மாவட்டத்தில் யாவரும் நல்லதொரு ஐக்கியத்துடனும், புரிந்தணர்வுடனும் செயல்பட இவ்வாறான நிகழ்வுகள் வழி சமைக்கும் என்பது எமது நம்பிக்கையாகும் என மௌலவி எஸ்.ஏ.அசீம் தெரிவித்தார்.

'இப்தார்' நிகழ்வு ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் உண்டுபண்ணுகின்றது - மௌலவி எஸ்.ஏ.அசீம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY