
posted 14th April 2022
இலங்கையில் முஸ்லிம்களின் புனித நோன்பு காலம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், வழமை போன்று இன நல்லிணக்கத்திற்கான நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வுகளும் நடைபெறத் தொடங்கியுள்ளன.
பொது அமைப்புக்களாலும், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், கல்விக் கூடங்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்த இப்தார் நிகழ்வுகளில் நாட்டின் சகல இனத்தைச் சேர்ந்தோரும் அழைக்கப்பட்டு பங்கு பற்றிவருகின்றனர்.
இனநல்லிணக்கத்தை இப்புனித நோன்பு மாதத்தில் வலுப்படுத்தும் வண்ணமான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனின் தவிசாண்மையுடனும், கணக்காளர் வை. ஹபீபுல்லாவின் தலைமையிலும் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், வலயக் கல்வி அலுவலக தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து பங்கு கொண்டமை சிறப்பம்சமாகும்.
மேலும் இந்த இப்தார் நிகழ்வில் நிந்தவூர் பிரதெச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.ஆர்.எம். றிஸ்மி, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம். ரயீஸ்.
மற்றும் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ். அப்துல் ஜலீல், எம்.ரி.ஏ. தௌபீக், ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ. றகீம், வரணியாசாந்த குமார், ஜிஹானா ஆலிப், நிருவாக உத்தியோகத்தர் எம். இராமக்குட்டி, சமாதானக் கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ. றசீன், உதவிக்கல்விப் பணிப்பாளர் கலீல் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மௌலவி எம்.எச்.எம். ரியால் (காஸிபி) விசேட சன்மார்க்க உரை நிகழ்த்தினார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY