இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்தக் கோரிக்கை

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண அரச சேவை நிறுவனங்களில் கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டிடுள்ள இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவரச தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

சங்கம் சார்பில், சங்கப் பொதுச் செயலாளர் ஏ. புஹாது அனுப்பி வைத்துள்ள இந்த கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ங்களின் செயலாளர்கள், மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் சுமார் 20 பேருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், இப்பதவிகளில் பதில் கடமை வகித்த உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தப்பட்டு, புதிதாக சிலர் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

எனவே பின்வரும் காரணங்களினிமித்தம் இந்த இடமாற்றத்தை தற்காலிகமாக இடை நிறுத்த ஆவன செய்யுமாறு கோருகின்றோம்.

01. கிழக்கு மாகாண இணைந்த சேவையில், 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

02. இந்த இடமாற்ற கட்டளை மூலம் சில உத்தியோகத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமையால், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்தக் கோரிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More