ஆளுநருடன் சந்திப்பு

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆளுநருடன் சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி அபிவிருத்தி போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கேட்டுக் கொண்டார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான சந்திப்பு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது நாடு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை மீட்டுவரும் நிலையில், ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுநரின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறோம்.

சிறுபான்மையினக் கட்சி ஒன்றின் தலைவரான தாங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கிழக்கு மக்களும் இதனை பெரிதும் ஆதரித்துள்ளனர்.

குறிப்பாக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக தற்காலிக, பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இக்கோரிக்கையை நானும் ஏற்கிறேன். அதற்கான அனுமதி மத்திய அரசாங்கத்தினால் கிடைக்கும்போது அதனை விரைவாகச் செய்வேன். இதற்கான அனுமதி கிடைப்பதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை பாராளுமன்ற உறுப்பினரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்தார்.

ஆளுநருடனான இச்சந்திப்பில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். முபாரக், அன்வர் சதாத், பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எம். அறூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆளுநருடன் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)