
posted 3rd November 2022
அகில உலக திருச்சபையானது கார்த்திகை மாதம் இரண்டாம் திகதி மரித்த சகல ஆத்துமாக்களை நினைவுகூறும் தினமாக அனுஷ்டித்து வருகின்றது.
இதற்கமைய மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை பங்கில் இவ் தினத்தை நினைவுகூறும் முகமாக பேசாலை கத்தோலிக்க சேமக்காலையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்ட பெற்றோர் உற்றார் உறவினர்கள் என கல்றைகளில் மலர்கள் தூவி மெழுகுதிரிகள் கொழுத்தி மரித்த ஆன்மாக்களுக்காக செபிக்கப்பட்டது.
இவ் சேமக்காலையில் 02.11.2022 அன்று பிற்பகல் நடைபெற்ற திருப்பலியானது பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஓழுங்கமைப்பில் மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும் தற்பொழுது இளைஞர் ஆணைக்குழு இயக்குனருமான ஏ. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் பெரிகட்டு பங்கு தந்தை அருட்பணி அருள்ராஜ் குரூஸ் அடிகளார் மற்றும் பேசாலை உதவி பங்குத் தந்தை அருட்பணி டிக்சன் அடிகளார் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கல்லறைகளை ஆசீர்வதித்த நிகழ்வுகளும் இடம்பெற்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)