ஆதரவு வழங்கியது ஆசிரியர் சங்கம்

ஆதரவு வழங்கியது ஆசிரியர் சங்கம்

பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்களின் நியாயமான தொழிற்சங்க போராட்டத்திற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு கரம் நீட்டுவதாக செயலாளர் எம்.ஏ.எம். சமீம் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு மற்றும் ஏனைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாகவும் நடைபெற்று வருகின்ற தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களினால் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஏனைய ஆய்வு கூட செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மிகுந்த பிரச்சினைகளை ஆட்கொண்டுள்ளது.

இருந்த போதிலும் கடந்த எட்டு வருடங்களாக அரசாங்கத்தினால் வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற கல்வி சாரா உத்தியோகத்தர்களில் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய மாதாந்தப் படி அதிகரிப்பு போன்ற விடயங்கள் உடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக சூழலை வினைத்திறன் மிக்க சூழலாக மாற்றி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக தொழில்படுகின்ற கல்வி சாரா உத்யோத்தர்களின் நீண்ட கால குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து இந்த விடயங்களை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்செயலாளர் எம்.ஏ.ஏ.எம். சமீம் அவர்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகங்களை பொறுத்தமட்டில் கல்வி சாரா ஆளனியினர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தொடங்கி ஏனைய கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பக்க பலமாகவும் பல்கலைக்கழகத்தின் உயர்வுகளுக்கும், அதன் வினைத்திறன்மிக்க சேவைகளுக்கும் மாணவர்கள் தொடக்கம் ஆசிரிய சமூகம் வரை தங்களது அயராத பங்களிப்புகளை வழங்கி வருகின்ற இந்த வேளையில், ஏனைய அரசுதுறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புகள் இதுவரை காலமும் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களது கோரிக்கையை முன்னுறுத்தி கடந்து எட்டு வருடங்களாக மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான இந்த போராட்டம் அரசாங்கத்தின் உயர்மட்டங்களின் கவனத்திற்கு செல்லப்பட்டு உடனடியாக அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏகோபித்த தீர்மானத்தை வழிமொழிந்தவராக அரசாங்கம் இவ்விடத்தில் உடன் கரிசனை காட்டப்பட வேண்டும் என்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.எம். சமீம் குறிப்பிட்டார்.

ஆதரவு வழங்கியது ஆசிரியர் சங்கம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)