
posted 5th February 2022
மரணமடைந்த சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் தீவிர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்குக் காரணமான விபத்தானது மன்னார் தலைமன்னார் ஏ14 பிரதான வீதியில் இவர்களுடன் பயணித்த முற்சக்கர வண்டியின் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் நடைபெற்ற அகோரமான விபத்தானது இன்று சனிக்கிழமை (05.03.2022) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது;
மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் கிராமத்திலிருந்து பேசாலை பகுதியிலுள்ள நடுக்குடா பகுதிக்கு வயது போன தாயை பார்க்கச் சென்று மறுநாள் வீடு திரும்பிய போது, ஒலைத்தொடுவாய் வீதிக்கூடாக முச்சக்கர வண்டி திரும்பியபோது இதற்கு பின்புறமாக தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வந்த ரிப்பர் வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டியும், பிரயாணிகளும் தூக்கி எறியப்பட்டனர்.
முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி வீதிக்கு அருகாமையில் வெள்ளநீருக்குள் வீசி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பலத்த காயங்களுக்கு உள்ளான தாய் சந்தியோகு செல்வி (வயது 30), மகன் கெபின்கரன் (வயது 6), மகன் கானோர் ( வயது 1) ஆகியோருடன் ஆட்டோ சாரதியும் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மகன் கெபின்கரன் (வயது 6) மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் சிகிச்சை பலனளிக்கமால் சற்று நேரத்தில் மரணத்தை தழுவிக் கொண்டார்.
ஏனையோர் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House