ஆட்சி முறைமை மாற்றமே நாட்டின் இப்போதைய தேவை - மன்னார் ஆயர்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆட்சி முறைமை மாற்றமே நாட்டின் இப்போதைய தேவை - மன்னார் ஆயர்

மக்கள் எதிர் கொள்ளும் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் மிகப்பெரிய மாற்றம் தேவை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி அவர் வெளியிட்ட ஆசி செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உயிர்ப்பு ஞாயிறு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் மறை உண்மையும், மையமும் ஆகும்.

நமது நாடு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள வேளையில் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்.

எமது மக்கள் எதிர் கொள்ளும் பெரும் சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் பெரும் மாற்றம் தேவை. அதற்காக பாடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

இந்த நேரத்தில் எமக்கு தெய்வீக இறை தலையீடு தேவையாக உள்ளது. எனவே, நாம் இருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்து நம்மை விடுவிக்க இந்த ஈஸ்டர் காலத்தில் உயிர்த்த இயேசுவிடம் உருக்கமாக மன்றாடுவோம்.

இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபடச் சென்றோர் மற்றும் வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலின் ஐந்து ஆண்டுகள் நிறைவைக் குறிக்கின்றது. 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 500 பேர் வரை காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்கள் நடந்து சரியாக 5 வருடங்கள் கடந்துள்ளபோதும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட போதிலும் நாங்கள் இதுவரை உண்மையை அறிய முடியவில்லை.

ஈஸ்டர் அனுபவம் எதிர்காலம் மட்டில் உள்ள நிச்சயமற்ற நிலையில் நம்பிக்கையளிக்கிறது. தாய் நாட்டின் இந்த இருள் சூழ் நேரத்தில் உயிர்த்த இயேசுவின் ஒளியால் நாம் அறிவொளி பெறுவோம் என்றுரைத்தார்.

ஆட்சி முறைமை மாற்றமே நாட்டின் இப்போதைய தேவை - மன்னார் ஆயர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More