ஆசிரியர் சங்கத்தின் அறைகூவல் - பகிஷ்கரியுங்கள்

மே 06 ஹர்த்தால் தினத்தன்று அனைத்து அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பாடசாலைகளை நடத்தாது தம் எதிர்ப்பை வெளிப்படுத்தி அரச எதிர்ப்பு செயற்பாடுகளை உயர்ந்தபட்சம் முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (06) எமது நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, நாட்டின் எதிர்காலத்தைப் பலிகொடுத்து, நாளைய சந்ததியினரையும் அழிவின் விளிம்பிற்கே கொண்டு வந்துள்ள, மக்களை வதைக்கும் ராஜபக்‌ஷ ஆட்சி தக்கவைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென அனைத்து அரச ஊழியர்கள் உட்பட, தனியார் மற்றும் அரசு ஆதிக்கம் உடைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளனர்.

அதிகூடிய அரச ஊழியர்களாக உள்ள ஆசிரியர்கள் கடந்த 28ஆம் திகதி போராட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

அதேபோன்று மே 06 ஹர்த்தால் தினத்தன்று அனைத்து அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பாடசாலைகளை நடத்தாது, தம் எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரச எதிர்ப்பு செயற்பாடுகளை உயர்ந்த பட்சம் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அத்துடன் தத்தமது பிரதேசங்களில் இடம்பெறும் போராட்டங்களில் அனைத்து அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் தவறாது கலந்துகொண்டு, எமது பலத்தினை வெளிப்படுத்துவதோடு அரச எதிர்ப்பு பதாதைகளையும் காட்சிப்படுத்தி, பொது உடைமைகள், தனியார் உடைமைகள் எதனையும் பாதிக்காத வகையில் இப்போராட்டத்தை முன்னெடுத்து எமது பலத்தினை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் ஊழல் மலிந்த அரசாங்கம், மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை கட்டவிழ்த்து விடுவதோடு அரசாங்கத்தால் பயன்படுத்தியுள்ள ஆட்கள் உங்கள் போராட்டத்தின் மத்தியில் வந்து பல இடையூறுகளை விளைவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

அதனால் அவ்வாறான வன்முறை முயற்சிகளுக்கு இரையாகாது மக்கள் போராட்டத்தை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்து, அரசாங்கத்தை விரட்டியடிக்கும் இப் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.

ஆசிரியர் சங்கத்தின் அறைகூவல் - பகிஷ்கரியுங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY