அரச காணியை அபகரித்த தனிநபர்

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனி நபர் ஒருவர் 500 ஏக்கர் அரசகாணியினை அத்துமீறி அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏ-9 வீதியில் பறண்நட்டகல் சந்தியில் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில், “எமது கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியை தனிநபர் ஒருவர் அபகரிக்கும் செயல்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்.

பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருக்கு தெரியப்படுத்தியும் எமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. எமது கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவரும் நிலையில் 200 இற்கும் மேற்பட்ட உபகுடும்பங்களுக்கு காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

எனவே, அந்த காணியை மீட்டு காணியற்று இருக்கும் எமது கிராமத்தை சேர்ந்த உப குடும்பங்களுக்கு வழங்குமாறு உரிய அதிகாரிகளை நாம் வேண்டி நிற்கின்றோம்”, என்றனர்.

குறித்த பகுதிக்குசென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன் மற்றும் வவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன், ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடினர். அத்துடன் ஆக்கிரமிக்கப்படும் காணியையும் பார்வையிட்டனர்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்,

“500 ஏக்கர் காணியை அபகரிப்பது நியாயமா?”

“விவசாயிகளை வாழவிடு இதுவாநீதி”

“நிலம் எங்கள் உரிமை”

“பணம் படைத்தவருக்கு 500 ஏக்கர் சொந்தம், ஏழைமக்களுக்கு என்ன சொந்தம்”

போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அரச காணியை அபகரித்த தனிநபர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House