
posted 25th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கூட்டு திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு நிறைவுபெற்றது.
கடந்த 15 ஆம் திகதி பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றப்பட்டு, நவ நாட்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனை வழிபாட்டுடன், திருச்சொரூப பவனி இடம்பெற்றது.
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட திருவிழா கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புகொடுத்தனர்.
திருப்பலியினை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச்சுரூப ஆசீருடன் கொடியிறக்கம் இடம்பெற்றது.
கப்பலேந்தி அன்னையின் திருச்சுரூபம் வாவியில் கொண்டு செல்லப்பட்டு வாவி ஆசீர்வதிக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் இவ் ஆலய விழாவினில் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)