
posted 4th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அமரர் இரா சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய வட மாகாண ஆளுநர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இன்று அ வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் உருவப்படத்திற்கும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் உறவினருடன், கௌரவ ஆளுநர் அவர்கள் தனது அனுதாபங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)