அனைவரின் வாழ்விலும் புதுவசந்தம் ஏற்பட வாழ்த்தும் அங்கஜன்
அனைவரின் வாழ்விலும் புதுவசந்தம் ஏற்பட வாழ்த்தும் அங்கஜன்

அங்கஜன் இராமநாதன் பா.உ.

உலக மக்கள் அனைவர் வாழ்விலும் தீப ஒளி புது வசந்தத்தை ஏற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வாழ்த்தியுள்ளார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;

நல்லதோர் எதிர்காலத்தின் தொடக்க நாளாக இத் தீபத் திருநாள் அமையும் என நம்புகிறேன். கொரோனா நோய்த்தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட்டு படிப்படையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அந்த இருளில் இருந்து மீண்டு உலக மக்கள் புது விடியலை நோக்கி பயணிக்கும் நாளின் தொடக்க நாளாக இந் நாள் அமைய வேண்டும்.

தீமைகள் புரிந்த நரகாசுரனை ஆட்கொண்ட நாளாக உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் தீபாவளித் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களுக்கு தீமை புரிந்த நரகாசுரனை தெய்வம் ஆட்கொண்ட இந்நாளில் கொடிய சக்திகளின் கோரப் பிடியில் இருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட்டு சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலும்,ஆலயங்களிலும் சமயக் கிரிகைகளில் ஈடுபடுவோம்.

உலக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் துன்பங்கள் நீங்கி நன்மைகள் நிறைய இத் தீபாவளிப் பண்டிகை உறுதுணையாக அமைய எனது வாழ்த்துக்கள்.

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More