posted 6th May 2022
நாடு முழுதும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்டு இன்றைய தினம் இடம்பெறுகின்ற கதவடைப்பு போராட்டம் வடமராட்சியில் பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி, போன்ற நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆக்காங்கே ஒரு சில வரத்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன. ஆனால் மதுபான சாலைகள் மட்டும் ஓய்வின்றி, கடை அடைப்பில் பங்கு கொள்ளாமல் தொடர்ந்து திறந்துள்ளமையும் அவதானிக்க முடிந்தது.
மழுமையாகப் பூட்டப்பட்டு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கையிலே, தனியார் வங்கிகள் 11 மணியுடன் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, இன்றைய தினம் கதவடைப்பு காரணமாக தனியார் போக்குவரத்து சேவைகளும் இடம் பெறவில்லை. ஆனால், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
அத்துடன், வடமராட்சி பகுதியில் உள்ள ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தமது வாகனங்களுடன் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர்.
வீதிகளில் மக்கள் நடமாட்டமோ மிக மிக குறைந்தளவிலையே இருக்கையிலே அனைத்து சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)