
posted 22nd August 2022
காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமரங்களை ஏற்றிவரும் வேளை பொன்னாலைப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனச் சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்த நிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். எனவே, வாகனச் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மரங்களைக் கடத்திய குற்றச்சாட்டின் கீழும் ஏனைய ஐவர் சந்தேகத்தின்பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமரங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)