posted 2nd November 2021
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை சந்தித்து வடக்கு மீனவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டிலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தனின் ஒழுங்கமைப்பிலும் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஏற்பாட்டாளர்களுடன் வடக்கு மாகாண மீனவர்களின் சார்பில் வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் என். வி. சுப்பிரமணியம், உப தலைவர் ஜே. பிரான்சிஸ், பொருளாளர் ஏ. மரியராசா, தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் வி. அருள்நாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Posted 25th June 2026
Posted 1 week ago
By Thaenaaram - Reel Review
Posted 25th June 2026
Posted 1 week ago
By Thaenaaram - Reel Review
Posted 25th June 2026
Posted 1 week ago
By Thaenaaram - Reel Review
Posted 25th June 2026
Posted 1 week ago
By Thaenaaram - Reel Review
எஸ் தில்லைநாதன்