அதிக வெப்ப நிலையும், மக்களின் அவலமும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அதிக வெப்ப நிலையும், மக்களின் அவலமும்

அதிக வெப்ப நிலையும், மக்களின் அவலமும்

நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்சமயம் நிலவிவரும் அதிகவெப்ப நிலை காரணமாக பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன், வெளியில் நடமாட முடியாது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வயோதிபர்கள், நிரந்தர நோயாளர்கள் குறித்த அதிக வெப்ப நிலைகாரணமாகப் பெரும்பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

விசேடமாக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (ர்நுயுவு ளுவுசுழுமுநு) காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவருவதாகவும் சில மாவட்ட தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களின் தகவலின்படி அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதெனத் தெரிய வருகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற அதிக வெப்பநிலை காணப்படுவதால் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறை போன்ற முக்கிய விவசாய மற்றும் மீன்பிடி மாவட்டங்களில் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் அதிக வெப்பநிலை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாடத் தொழில்களான மேசன், தச்சசுத் தொழில் உட்பட கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிலவும் கொடும் வெப்பநிலை காரணமாக வெள்ளரி மற்றும் தர்ப்பூசணி தோடம்பழம் என்பவற்றுக்குப் பெரும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி படுவான்கரை போன்ற பிரதேசங்களில் அறுவடையாகும் வெள்ளரிப் பழங்களை தினமும் கொண்டுவந்து பல பிரதேசங்களிலும் விற்பனை செய்து வருமானம் பெறுவோரும் தற்சமயம் அதிகரித்துள்ளனர்.

அதிக வெப்பநிலை தணியும் கால நிலை ஏற்படுவது எப்போது? என மக்கள் அங்கலாய்த்த வண்ணமுள்ளனர்.

அதிக வெப்ப நிலையும், மக்களின் அவலமும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)