
posted 14th January 2023

வசந்தகுமார் பிரகாஷ் சிவகுமார்
மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த வசந்தகுமார் பிரகாஷ் சிவகுமார் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் பள்ளிமுனையைச் சேர்ந்த திரு. திருமதி வசந்தகுமார் விக்டோரியா தம்பதினரின் புதல்வருமாவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர் கல்வி வரை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கற்றுள்ளார்.
இவர் கல்வி கற்ற காலங்களில் விளையாட்டிலும், ஏனைய பாடவிதானங்களிலும், மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஆன்மீக வளர்ச்சியிலும் மற்றும் சமூக சேவையிலும் திகழ்ந்து வரும் இவர் 17 வருடங்களாக மன்னார் பிரதான அஞ்சலக உதவியாளராக திகழந்து வருவதுடன் இப்பகுதி மக்களின் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)