posted 11th October 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
குழம்பியுள்ள மனங்களின் சுகமான வாழ்விற்கான தேனாரத்தின் குரல் (The Voice of Thaenaaram)
அன்பான எங்கள் வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் எமது கனிவாக வணக்கம்!
உங்கள் மனங்கள் பாரமாக இருக்கின்றதா? வாழ்க்கையில் சோர்வடைந்து விட்டீர்களா? பல சகாப்த துரோகங்கள் உங்கள் மனதினை தாங்கொணாத் துயரில் ஆழ்த்தியதால் உங்களால் மீளமுடியாமல் தவிக்கின்றீர்களா?
இதற்காகவே, நாங்கள் வெகு விரைவில் எமது ஒலிஅலையினை காற்றினில் கலக்கவுள்ளோம். இவ்வலையானது உங்கள் மனதினை நிரந்தரமாகக் குணப்படுத்தும், உங்களை இறுதியில் மகிழவைக்கும், வாழ்ந்த வாழ்க்கையினை மீட்டெடுக்கும் அலையாகவே இது இருக்கும்.
உங்களின் காயங்கள் ஆற்றுவதற்கு உடலில் ஏற்பட்டவை அல்லவே! மாறாக, உங்கள் மனதினை வதம் செய்த அம்புகளாச்சே!
மறவுங்கள், நடந்தவை அனைத்தையும், இல்லை உங்களால் மறக்க முடியாத நீறு பூத்த வடுக்களாக அவை இருக்கலாம், அவை எவையாக இருந்தாலும் நாங்கள் மாற்றுவோம். அதை நீங்களும் நம்ப வேண்டும்.
கைதட்டலிலிருந்து ஓசையினை எழுப்புவதற்கு எங்கள் கைகளில் உங்கள் கைகளால் அடியுங்கள். எங்களின் ஒரு பக்கமான கைகள் காணாது ஓசையினை எழுப்புவதற்கு. கைகளைக் கோருங்கள். காலம் மாற்றும் என்பது ஒரு புறம், தேனாரத்தின் குரல் மறுபுறம். உங்களை எழுந்து வீரியத்துடன் நடைபயில வைக்கும்.
எமது சிந்தனைகள், தியான வார்த்தைகள் எங்கள் வாழ்க்கை எழுதித்தந்த புத்தகங்களின் அத்தியாயங்கள். இவற்றினை எங்கும் இந்த உலகினில் தேடவும் முடியாது, காணவும் இயலாது. அது மட்டுமல்லாமல் எமது ஆன்மாவிலிருந்து எழும்பும் ஒரு விதமான உயிரோட்ட அலைகளிவை. இவை சொன்னால் புரியாது, பூரணமாகச் சொல்லி விளக்கவும் இயலாது. ஆனால், உங்களால் உணரமுடியும், அவற்றின் சக்தியின் பலத்தினை.
நீங்கள் மீண்டும் எழுந்து விட்டீர்கள் என்று எந்த உலகத்தின் முன்னால் தலை குனிந்து வாழ்ந்தீர்களோ அந்த உலகம் வியக்கும் படி நீங்கள் எழுந்து வீர நடை போடுவீர்கள்.
வாழ்க்கை வளம்பெற எங்களது வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தேனாரம் எழுத்து மற்றும் ஒலிபரப்புக் குழுமம் (The Thaenaaram Editorial & Broadcasting Team)
thaenaaram.com
- எங்களது தேனாரத்தின் குரல் (The Voice of Thaenaaram) லினை எமது தேனாரம் Home Pageற்குப் போய் Articles பகுதியினைக் கிளிக் செய்ய வரும் Drop down Menuவில் The Voice of Thaenaaram பகுதியினைக் காணலாம்.
- உலகளாவிய செயலிகளில்: உங்கள் மொபைல் போன்களில் Spotify மற்றும் Apple Podcasts செயலிகளின் தேடல் பகுதியில் 'தேனாரத்தின் குரல்' என்று தட்டச்சு செய்து எங்களைப் பின்தொடரலாம் (Follow).
ஒவ்வொரு வாரமும் புதிய விடியலை நோக்கி இணைந்து பயணிப்போம்.