
posted 26th September 2021
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (23) வெற்றிலைக்கேணி கோரியடிப் பகுதியில் கரைவலை தொழில் செய்துகண்டிருந்த குயின்ரன் சுதர்சன் (வயது -38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இவரது உடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
நேற்று சனிக்கிழமை(25) வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார். இதன்போது உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சாட்சியம் வழங்கினர்

எஸ் தில்லைநாதன்