217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (03) அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.

பலாலி அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 20, 28 மற்றும் 30 வயதுடைய மூவரே பொலிகண்டி பகுதியில் வைத்து வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று (03) அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர் , கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 217 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கையளித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கஞ்சா பொதிகளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தனர்.

217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More