அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம்

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் நேற்று (26) புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், மாலை வலி. வடக்கு மயிலிட்டித் துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சனை, மீனவர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்றமை தொடர்பில், இதன்போது அவர் மீனவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்துக்குச் சென்ற அவர், அங்கு மீள்குடியேற்றக் குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும், பொதுமக்களுடன் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்றமை தொடர்பிலும் அவருக்கு வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பில் அவர், தான் ஜனாதிபதியுடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக துணைத் தூதுவர் கூறியுள்ளார்.

அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More