ஹக்கீம் விஜயம்

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பொலனறுவை, மட்டக்களப்ப மாவட்டங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சில நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொண்டார்.

குறிப்பாக பொலன்னறுவை கதுறுவெல ஜும்ஆபள்ளிவாசலில் இடம் பெற்ற முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஒன்று கூடல் நிகழ்வில் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட உரையாற்றினார்.

இந்த முக்கிய நிகழ்வில் கலாநிதி. றவூப் லெய்ன் வளவாளராகக்கலந்து கொண்டு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களையும் அளித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் ஏறாவூர் இல்லத்திற்குச் சென்ற ரவூப் ஹக்கீம் அவரது தாயாரின் மறைவையொட்டிய தமது அனுதாபத்தை நேரில் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

ஹக்கீம் விஜயம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY