அங்குரார்ப்பண நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வைத்தியசாலைகளில் மாத்திரம் செறிவாக்கப்பட்டு இருக்கின்ற பற்சிகிச்சை நிலையங்களை பரவலாக்கி பல் வைத்திய நிபுணர்களின் சேவையை சமூக மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வரைவு தொடர்பான கலந்துரையாடல் பணிமனையின் வாய் சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மெலிண்டன் கொஸ்தா அவர்கள் பங்குபற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித் அவர்களும் கல்முனைப்பிராந்திய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர் அவர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள் வைத்திய அத்தியட்சகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் பங்கு பற்றினார்கள்.

குறித்த கலந்துரையாடலில் வாய் சுகாதாரப் பிரிவினை மேம்படுத்தி தரமான சேவைகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் பல் வைத்திய நிபுணர்களினால் தனித்தனியான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேராசிரியரும் விசேட மகப்பேற்று நிபுணருமான எம். திருக்குமார் அவர்கள் விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தியதுடன் குழந்தை மருத்துவ விசேட வைத்திய நிபுணர் எஸ்.என் ரொசாந்த் அவர்களும் விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.

குறித்த நிகழ்வினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய் சுகாதார பிரிவின் பிராந்திய பற்கிச்சை நிபுணர் எம். எச். எம் சரூக் அவர்கள் இணைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அங்குரார்ப்பண நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

அங்குரார்ப்பண நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
அங்குரார்ப்பண நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
அங்குரார்ப்பண நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
அங்குரார்ப்பண நிகழ்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More