
posted 9th November 2021
தமிழர்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருகிறோம் என்று கூறியவர்கள் இன்று எங்களுடைய மரபுரிமைகளைக் கூடப் பெற்றுத்தர முடியாதவர்களாக உள்ளனர் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வரலாற்று பாரம்பரியம் மிக்க மண்ணித்தலை சிவன் ஆலயத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
நீண்ட காலமாக எமது மக்கள் ஏங்கிக் காத்திருந்த விடயம் தற்போது நிறைவேறி உள்ளது. அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களால் வடக்கில் உள்ள தொல்பொருள் சின்னங்கள்,மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாம் இந்த விடயங்களைக் கேட்டது கடந்த நல்லாட்சி காலத்தில். அவர்கள் தமிழர்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருகிறோம் என்று கூறினார்கள் ஆனால் இன்று எங்களுடைய மரபுரிமைகளைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக உள்ளனர்.
ஆனால் இன்று நாம் எதிர்பார்க்காத ஓர் அரசாங்கம் எங்கள் மரபுரிமைகளையும்,தொல்பொருள் சின்னங்களையும் பேணிப் பாதுகாக்கின்றது. அமைச்சர் நேரடியாக வருகை தந்து இந்து ஆலயங்களைக் கட்ட நடவடிக்கை எடுத்திருப்பது முன்னேற்றகரமான செயற்பாடாகக் காணப்படுகின்றது.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மண்ணித்தலை சிவன் ஆலயத்தை பாதுகாப்பதற்குரிய பணிகள் ஆரம்பம்
தமிழர்களின் பூர்வீகத்தை அழித்துக் கொண்டிருக்கும் பௌத்த சிதைவுகள்

எஸ் தில்லைநாதன்