
posted 7th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
முள்ளிவாய்க்கால் அவலத்தினை பிரதிபலிக்கும் கஞ்சி வழங்கல் ஆரம்பமானது
யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களின் உணவாக உப்பு இல்லாத கஞ்சிதான் அவர்களின் உணவாக இருந்தது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் குறியீடாக இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவுகூரப்பட்டது. இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு யாழ். கிறிஸ்தவ ஒன்றியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலை ஆரம்பித்தது.
இவ்வாறான கொடூர அவலத்தையும் எம் இனம் அனுபவித்துத் தாண்டயது என்பதை நினைவிருத்தும் விதமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)