வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே சிறந்தது - செல்வம் எம்.பி.

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே சிறந்தது - செல்வம் எம்.பி.

வடக்கு கிழக்கு பிரிக்க முடியாத தமிழர்களின் தாயகம். இவ்வாறு இருக்க வடக்கு கிழக்கு அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தும்போது இவ்விரு மாகாணங்களையும் ஒன்றிணைத்து நடாத்துவதே சிறந்தது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக் கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அபிவிருத்தி அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஏனைய விடயங்களைப் பேசுவதற்கு தாங்கள் 11, 12, 13 ஆகிய திகதிகளை ஒதுக்கினீர்கள்.

வடக்கு, கிழக்கை பிரிக்க முடியாது. வடக்கும் கிழக்கும் எமது தமிழர்களின் தாயகம். எனவே வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி, அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது இவ்விரு மாகாணங்களையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்தது என நான் கருதுகின்றேன்.

நான் ஒரு கட்சியின் தலைவர். கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எனது கட்சி வடக்கு மாகாணத்தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் செயற்படுகின்றது.

எனவே, இரு மாகாணங்களின் அபிவிருத்தி, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஒரே மேசையில் பேசி தீர்க்கமான தீர்வு காண்பதே சிறந்தது.

அப்படி இல்லையெனின் விவாதிப்பதில் அர்த்தமே இருக்காது. இந்த கூட்டத்தில் நான் மட்டும் கலந்துகொள்வதால் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என உணர்கிறேன்..

எனவே வடக்கு கிழக்கு பிரச்சனைகள் பற்றி பேசும் போது அனைத்து வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே மேசைக்கு அழைத்து பேசுவது நல்லது. இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே சிறந்தது - செல்வம் எம்.பி.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)