Salangai Oli- சலங்கை ஒலி - 11 - 14.03.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysis ஆனது 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;

  • ககன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பூமியிடம் இருந்த வந்த கேள்வியினை ககன் எதிர்பார்க்கவில்லை.
  • ஒரேயொரு கேள்வி ககனை உறைய வைத்தது. காதல் அவனை வாட்டியது.

- பூமியின் கண்ணீரானது உங்களை எல்லாம் என்ன செய்யும ் என்று தினம் தினம் செத்துப் பிழைப்பீர்கள் என்று சாபம் போட்டு விட்டு, நான் சொல்வது பூமிக்கு விளங்கும் என்ற ஒரு clueவினைச் சொன்னான். அது என்ன?

  • ஷரத்சந்திராவும், அபூர்வாவும் ஆடிப் போனார்கள், ககனின் அதிரடி நடவடிக்கையினால். அத்துடன் உடைந்து போன ஷாரதாவின் குடும்பம் பூமிதான் கல்யாணத்தினை நிறுத்தினாள் என்ற கூற்றானது மிகவும் ஆச்சரியத்தினை உருவாக்கியது.
  • விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டோமே என்ற ஆணவத்தில் இருந்த மீராவுக்கும், அபூர்வாவுக்கும் வைத்தாளே பூமி ஆப்பு.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Salangai Oli - சலங்கை ஒலி - 11 - 14.03.2026

கல்யாணத்திற்கான சடங்குகள் பூமியின் பக்கமும், ககனின் பக்கமுமாக இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தன. ககனோ மிகவும் சந்தோஷமாக இருக்கையிலே, பூமியோ வாடிப் போயிருந்தாள். இதனை ககனே நேராக அதாவது, வீடியோ கோளினில் கதைக்கும் போது அவதானித்தான். பூமியின் வாட்டம் ஏன் என்று பூமியும் சொல்லவில்லை. ககனினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

மஞ்சள் நீரினால் ஸ்நானம் செய்யும் போது தானும் தனது மகனது நிகழ்வினைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கிறிஷ்ணபிரஷாத்திற்கு, தாய் ஷாரதா அதனை வீடியோ போட்டுக் காட்டி தனது கணவனை மகிழவைத்தா. ஆனால், ஷாரதாவுக்கோ இந்தக் கல்யாணம் இனிதே முடிந்து விடுமா என்ற பயம் இருந்து கொண்டேயிருந்தது.

இதற்குக் காரணமாக, ஷரத்சந்திராவும், அபூர்வாவும் போட்ட திட்டத்தினால், எப்படியாவது ஷாரதாவை கிறிஷ்ணபிரஷாத்திடமிருந்து விவாவரத்து செய்ய வைத்து கிறிஷ்ணபிரஷாத்தை நிரந்தரமாக மீராவிடம் இருந்து பிரித்து விட்டால் மட்டும்தான் இந்த கல்யாணம் நடக்கும் என்றது அபூர்வாவினதும், ஷரத்சந்திராவினதுமான நிபந்தனையேதான். இதற்காக அபூர்வா மீராவுக்கு நன்மையினைத்தான் செய்கின்றா என்று நினைத்து விட முடியாது. மாறாக, ஷாரதாவை நிரந்தரமான விரோதியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஷரத்சந்திராவிற்கு அவரது தங்கைக்கு நல்ல வாழ்க்கையினை உருவாக்கி தான் கொடுப்பது போல இந்தப் பக்கம் நடித்துக் கொண்டு, ஷாரதாவிற்கு துரோகத்தினைச் செய்கின்றாள், அபூர்வா.

நல்லதைத்தான் எப்பவும் அபூர்வா செய்வாள் என்று மிகவும் ஆணித்தரமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார் ஷரத்சந்திரா. அதுமட்டுமல்லாமல், தனது தங்கைக்குத்தானே அபூர்வா செய்கின்றாள் என்று பெருமிதத்துடன் நிமிருந்து பெருமை காட்டுகின்றார். இது இவரின் கண்மூடித்தனமான நம்பிக்கை.

ஷாரதா விவாகரத்தினை எத்தனையோதரம் கேட்டும், கிறிஷ்ணபிரஷாத் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் இருக்கையிலே, அபூர்வா, மீராவைத் தூண்டினாள், இந்த விவாகரத்தினை நீயாகப் போய் ஷாரதாவிடம் இறுக்கமாகவும், வெருட்டியும் கேள் என்று. நாணிலிருந்து வெளிக்கிட்ட அம்பு போலச் சென்றாள் மீரா, ஷாரதாவின் வீட்டிற்கு. தான் தீக்குளித்து தற்கொலை செய்து விடுவேன் என்று ஷாரதாவை வெருட்டினாள், மீரா. அதுமட்டுமல்லாமல், ஷாரதாவை அவவின் மகன் மேலே சத்தியம் பண்ணும்படி கட்டாயப்படுத்தியும் ஷாரதாவை வெருட்டினாள்.

மெல்லிய மனம் கொண்டவதான் ஷாரதா. தன் மகனின் கல்யாணம் தன்னால் நிற்கக் கூடாது என்று தன் மகன் ககனின் மேலே சத்தியம் பண்ணினா, ஷாரதா. தன் சுயபுத்தி இல்லாத மீரா சத்தியத்தினை எதற்கெல்லாம் கேட்பதென்று ஒரு விவஸ்தையும் இல்லாமல் சத்தியத்தினை வாங்கியவளாய் சந்தோஷமாகத் தன் வீட்டிற்குச் சென்றாள். அபூர்வாவுடன் தன் சந்தோஷத்தினைப் பகிர்ந்தும் கொண்டா.

கல்யாணத்தின் திகதியும், நேரமும், போட்டியின் திகதியும், நேரமும் அபூர்வாவின் செல்வாக்கினால் ஒரே திகதியும், நேரமுமாக ஆக்கப்பட்டது. இதில் என்ன கொடுமை என்றால், பெரிய இடத்தில் அபூர்வாவிற்குச் செல்வாக்கு இருக்கும் என்றால், அந்தப் பெரிய இடம், இது தவறு என்று கேட்காமல், தனது அதிகாரத்தினைப் துஷ்பிரயோகம் செய்ய வைத்த அபூர்வாவின் கோரிக்கைக்கு சம்மதம் சொல்லுமானால், இந்த அதிகாரமானது கடவுளைப் பொறுத்தவரை தண்டிக்கப்படும் என்பது நம்பிக்கை.

இதனால், பாதிப்பை ஏற்படுத்தும் அபூர்வாவை விட, அதற்கு ஒத்துப் போனவர்தான் கூடுதலான கடவுளின் தண்டனைக்கு ஆளாக வேண்டியும் வரலாம். ஏனென்றால் இதில், பாதிப்பு உண்டாவதும் வாழ்க்கை அழிவதும், ககனினதும், பூமியினதுமாகும் அல்லவா.

எவ்வளவோ ஆசையோடு ககனும், பூமியும், சாதாரணமான காதல் ஜோடிகள் தங்களது பிரச்சினையான காதல் பயணத்தினைத் தாண்டி ஒருவாறாக கல்யாணத்திற்கு நெருங்கிய சமயமாக, தாங்கள் வாழப்போகும் வாழ்க்கையினைப் பற்றியெல்லாம் கனவு கண்டிருப்பார்கள். அது மட்டுமல்லாமல், தனது அப்பா, ஷரத்சந்திராவும் தனது கல்யாணத்திற்குச் சம்மதித்துள்ளார் என்ற சந்தோஷத்தில் பூமி. ஆனால், அந்தக் கனவானது, குறுகிய வாழ்வுக் காலத்தினைக் கொண்டிருக்குமென்று பூமி கனவிலும் நினைக்கவில்லை. அவளால், அதனை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. ஆனால், நம்ப வேண்டிய கட்டாயத்தில் கிறிஷ்ணபிரஷாத் கூறிய உண்மையானது பூமிக்குக் கசந்தது. அவளது இதயத்தினை சுக்கு நூறாக்கியது.

ஷரத்சந்திராவிற்கோ, தனது மகள் பூமிக்கு, ககனுடனான கல்யாணத்தில் விருப்பமில்லை என்பதனைக் கேட்டதும் உடைந்து போனாள். அனால், இதனை பற்றி ஒரு மூச்சும் விடவில்லை எவரிடமும், பூமி. இப்படி ஒன்றுமே சொல்லாமல் மனதினுள்ளே இருக்கும் பூமியின் நினைவுகளை ககனால் என்னென்று ஊகிக்க முடியும்?

எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கும் பூமிக்கு, இப்படியான மன நிலையினில் தனது அப்பா இருக்கின்றார் என்றதனை என்னென்று ககனுக்குச் சொல்லுவாள். இதனால், பிரச்சினைகளும், மனக் கசப்பும், குரோதமும் அதிகரிக்குமல்லவா. பொறுத்தாள் பூமி. உண்மையினை மறைத்தாள் அனைவருடமும் இருந்து.

கல்யாண மேடையிலே ககன் மிகவும் ஆனந்தத்தோடு பூமியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். பூமிக்கு அவளது அப்பா ஷரத்சந்திரா போட்ட சட்டத்தினை உண்மையாக தனது அம்மா ஷோபச்சந்திராவின் மேல் வைத்துள்ள அன்பினால்தான் என்று நினைத்தவளாய், தனது அப்பாவின் மேலுள்ள மரியாதையானது மிகவும் உச்சத்திற்கு போனது.

ஆனால், கிறிஷ்ணபிரஷாத் கூறிய பின்புதான் பூமிக்குத் தெரிந்தது, தனது அப்பா தனது கண்ணீரைப் பார்த்தெல்லாம் தனது கல்யாணத்திற்கு ஒத்துப் போகவில்லை, மாறாக, ஷாரதா அத்தையின் தாலியை அறுப்பதற்கு அபூர்வாவுடன் சேர்ந்து போட்ட நாடகத்தின் ஒரு அத்தியாயம் என்று.

ஷாரதா அத்தையை வைத்து மீரா மிரட்டிக் கொண்டுருப்பதனை இரகசியமாக நின்ற வண்ணம் பூமி அவதானித்தும், கேட்டுக் கொண்டுமிருந்தாள். தனக்கு தாலி ஏற வேண்டுமென்றால், ஷாரதா அத்தையின் தாலி இறங்க வேண்டும் என்றதுதான் அடிப்படை கோரிக்கையாக இருந்தது. இதற்கு ஒரு பெண்ணாக இருந்தால் அவள் ஒரத்தியின் தாலியைப் பறிக்க மாட்டாள். ஆனால், இவர்கள்?

மீராவின் அறாஜகமானது மிகவும் உக்கிரத்தினைத் தாண்டி விட்டது. மகன் ககனுக்காக தனது தாலியை விட்டுக் கொடுக்கின்றா ஷாரதா. அதுமட்டுமல்லாமல், கிறிஷ்ணபிரஷாத்தும் அதற்கு ஒத்துப் போகின்றார். இருவரினதும் கையொப்பம் இடப்பட்ட விவாகரத்துப் பத்திரத்தினை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு போய் மீரா அபூர்வாவிடம் கொடுக்கின்றா. அதனை அபூர்வாவோ மரிதாணியிடம் பத்திரப்படுத்தி வைக்கும்படி கொடுத்து பத்திரப்படுத்துகின்றார்கள், அப்பத்திரத்தினை.

இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூமி சும்மா விட்டு விடுவாளா? அந்தப் பத்திரத்தினை எடுத்து எரித்து அழித்து விடுகின்றாள். உங்கள் அப்பாவிற்கும், அம்மாவிற்குமான விவாகரத்து விஷயத்தினை எப்படி ககனிடம் பூமியால் சொல்ல முடியும்? இதற்குத்தானே ககனும் ஒருநாள் தனது தகப்பனை கட்டாயப்படுத்தினான். இதனால், ககன் செய்தது அவனைப் பொறுத்தமட்டில் நியாயம் என்றுதான் கூற முடியும். ஆனால், கிறிஷ்ணபிரஷாத்தின் பக்கமுள்ள காரணத்தினை, கேட்பதற்குத்தான் ஒருவரும் ஆயத்தமாக இல்லையே!

கல்யாணத்திற்கு ஆயத்தமான பூமியை அவளது அப்பா ஏன் ஆசீர்வதிக்கவில்லை என்று இப்போது அவளுக்குப் புரிந்தது. பூமிக்கும் ஏதோ அவளது உள்மனதிற்கு தெரிந்து விட்டது, நாட்டிய போட்டிக்குப் போகாவிடில் ஏதோ ஒன்று நடக்கும் என்று. இதனால், கல்யாண மேடைக்குச் செல்லாமல், பூமி நாட்டிய போட்டிக்கு தனிமையில் ஒருவருக்கும் தெரியாமலும், சொல்லாமலும் சென்று விட்டாள்.

கல்யாணப் பெண்ணைக் காணாததினால் அனைவரும் பலவிதமான கதைகளைக் கூறத் தொடங்கினார்கள். இதில், ஒரு சிலரோ அபூர்வாவினால் ஒழுங்குபடுத்தப்பட்டவர்கள். சொல்லக் கூடாதவற்றினையும், காதால் கேட்கக் கூடாதவற்றினையும் கொட்டித் தள்ளி தீர்த்து விட்டார்கள். இவற்றினைக் கேட்டுக் கொண்டும் ககனையும், குடும்பத்தினையும் கேவலமாகப் பேசிக் கொண்டும் ஷரத்சந்திராவும் மகிழ்ச்சியில் குதூகலமாக இருந்தார்.

அனைவரையும் ககன் அடக்கினான். பூமிக்காகக் காத்திருந்தான், கல்யாண மேடையினை விட்டிறங்காமலும். அந்த சமயம்தான் பூமி போட்டியிலே வெற்றி வாகையுடன் மீண்டு வந்தாள் கல்யாண மண்டபத்திற்கு. அதனைக் கண்டதும், ஷாரதாவும், ககனும் பூரிப்புடன் பூமியைக் கட்டி அணைத்தார்கள். பூமி வரும் நேரம்தான் நல்ல நேரம் என்றும், அதுதான் முகூர்த்த நேரம் என்றும் பெருமையுடன் சொன்ன ககனை, பூமியின் வார்த்தை அதாவது ஒரு கேள்வியானது திக்கு முக்காட வைத்தது. அவனது இதயமோ ஒரு கணம் நின்று, மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

இந்தக் கல்யாணத்தினை எப்படியாவது நிற்பாட்ட வேண்டும் என்று மனதினைக் கல்லாக்கியவளாய், ககனை வீ்ட்டின் மாப்பிள்ளையாக, அவனது அப்பா கிறிஷ்ணபிரஷாத் போல வரும்படி கேட்டதுதான் அந்தக் கேள்வியாக இருந்தது. கலங்கிப் போனான் ககன், எதிர் பார்க்காத கேள்வியினால். விலகிப் போனான், பூமியை விட்டு விட்டு.

கல்யாண மேடையில் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்காமலும் எந்த விதமான சந்தோஷமும் இல்லாமலும், பேயறைந்தவர்கள் போல இருந்தார்கள். கெட்டி மேளம் முழங்கின. ஐயரும் தாலியைத் எடுத்து ககனிடம் கொடுத்தார். தாலியை ஏற்றுக் கொள்வதற்காக பூமியும் தலையினைக் குனிந்து தயாரானாள். அனைவரும் அர்ச்சதை எடுத்து புதுமணத்த தம்பதிகளை வாழ்த்துவதற்காகத் தயாரானார்கள். ஷரத்சந்திராவும் தனது கைத்துப்பாக்கியினை றிகறை இழுத்துவிட்டு ககனைச் சுட்டுத் தள்ளுவதற்குத் தயாரானார். அதுவும் அபூர்வாவின் உசுப்பபேற்றலினால்தான்.

ககனும் தாலியுடன் குனிந்தான். பூமியும் தாலியினை ஏற்பதற்காக தலையினைக் குனிந்த வண்ணமாக இருந்தாள். இந்துவும் தாலியினைச் சேர்ப்பதற்காகவும், பூர்ணாவும் குனிந்த வண்ணமாக ஆயத்தமாக இருந்தார்கள். ககனும் தாலியினை பூமியின் கழுத்தின் பிற்பக்கமாக மூன்று முடிச்சுகளைப் போடப் போகும் நேரத்தில் எழுந்து நின்றான். தாலியினை தூக்கி எறிந்தான். கல்யாணத்தினைத் தான்தான் நிறுத்துவதாக சபையினில் கூறி, பூமியின் மேலே பழி போகாமல் தன் மேலே பழியினை போட்டுக் கொண்டான். ஏனென்றால், காரணம் தெரியாமல் ககன் பூமியை உண்மையாகக் காதலித்தவனாச்சே! அவளைக் களங்கப்படுத்துவானா. அல்லது யாரும் களங்கம் சொல்லத்தான் விட்டு விடுவானா?

அபூர்வாவும், ஷரத்சந்திராவும் எதிர்பார்த்த அனைத்தும் புஸ்வாணமாகியது. ஏமாற்றத்திலும், கேள்விகளின் மேல் கேள்விகளாக இவர்களின் மனதினிலே கோத்துத் தொங்கின. ஒருவிதமான உணர்வுகளும் இல்லாமல் பூமியின் மனதினை அறிந்து கொள்ளாமல், தன் மகளுக்கே அநியாயத்தினை அபூர்வாவின் மீதான மோகத்தால் செய்யத் துணிந்தார் ஷரத்சந்திரா.

அடுத்த நாளே பூமிக்கு மாப்பிள்ளையினை ஒழுங்காக்கி கொண்டு வந்தார்கள், அபூர்வாவும், ஷரத்சந்திராவும். மாப்பிள்ளை வீட்டாரும் வந்து கொண்டிருக்கின்றார்கள், பூமியை மீரா ஆயத்தப்படுத்துகின்றா. ஷாரதாவின் தாலியினை அறுத்து விட்டு, இங்கு தனது மருகளுக்கு அதே கையினால் பூமிக்குச் சோடனை போட்டு விட்டால் அது உருப்படியாகுமா?

இனித்தான் அனைவருக்கும் தண்ணி காட்டப் போகின்றாள் பூமி.
தொடர்ந்து பாருங்கள் எமது சீரியல் review and analysisஇனை என்னென்ன நடக்கப் போகின்றன என்று.

எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் பதிவிடுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)