பராமரிப்பின்றி துப்பரவு செய்யப்படாத காணி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை - அரச அதிபர்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பராமரிப்பின்றி துப்பரவு செய்யப்படாத காணி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை - அரச அதிபர்

மன்னாரில் டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பகுதினர் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் பராமரிப்பு இன்றி டெங்கு நோய்கள் பரவுவதற்கு எற்றவாறு காணப்படும் காணிகளின் உரிமையாளர்கள் அக் காணிகளை துப்பரவு செய்து கொள்ளுங்கள். அன்றேல் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலை எற்படும். மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் எச்சரிக்கை.

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் திங்கள் கிழமை (22) மாலை மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டது.

இதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் பகுதியில் பல தனியார் காணிகள் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன. இது தொடர்பாக நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி இருக்கின்றோம்.

இங்கு பராமரிப்பு இன்றி காணப்படும் காணிகளின் உரிமையாளர்களை இனம் காணுவதில் பல சிரமங்கள் காணப்பட்டு வருவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, வெற்றிடமாக பராமரிப்பு இன்றி காணப்படும் காணிகளை துப்பரவாக்கி டெங்கு நோய் பரவுவதனைத் கட்டுப்படுத்த உதவும்படியாக அரச அதிபர் கேட்டுக் கொண்டதோடு, அவ்வாறு துப்பரவாக்ப்படாத காணி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் இவ்வாறு தெரிவித்தார்.

பராமரிப்பின்றி துப்பரவு செய்யப்படாத காணி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை - அரச அதிபர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)