“தொழிற்சங்கங்களை அரவணைத்து செயற்பட முன்வாருங்கள்” புதிய ஆளுநருக்கு ஆலோசனை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

“தொழிற்சங்கங்களை அரவணைத்து செயற்பட முன்வாருங்கள்” புதிய ஆளுநருக்கு ஆலோசனை

“கிழக்கில் தொழிற் சங்கங்களையும் அரவணைத்து, தொழிற் சங்க ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு சிறந்த ஆளுநர் நிருவாகத்தை முன்னெடுக்க முன்வாருங்கள்”

இவ்வாறு, கிழக்கு மாகாண புதிய ஆளுநராகப் பதவிNயுற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் சார்பில் அதன் தலைவுரும் தொழிற் சங்க வாதியுமான எஸ் லோகநாதன் சங்கம் சார்பிலான வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த முப்பது வருடங்களுக்குப் பின்னர் தமிழ்ப் பேசும் மகனாகிய நீங்கள் கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நாம் மகிழ்வடைகிறோம்.
அதிலும் முக்கியமான ஓர் தொழிற் சங்கத் தலைவராகத் தாங்கள் உள்ளமை எமக்கு இரட்டிப்பு மகிழ்வையும், திருப்தியையும் தரும் அதேவேளை இந்த நியமனத்தை வழங்கிய ஜனாதிபதிக்குப் பெரு நன்றியையும் தெரிவிக்கின்றோம்.

கிழக்கில் தொழிலாளர் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டேவரும் நிலையில்,
அண்மையகாலங்களில் ஆளுநரால் தொழிற் சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டும், தொழிற்சங்க ஆலோசனைகள் புறந்தள்ளப்பட்டும் வந்தன.
இதனால் அத்தகைய ஆளுனரை அகற்ற வேண்டுமென்ற போராட்டத்தில் எமது தொழிற் சங்கம் முன்னின்றது.

மேலும் கிழக்கு மாகாண சபையின் தற்சமயம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் எவருமில்லாததால், தாங்கள் உடனடியாக மாகாண அமைச்சுகளுக்கு ஆலோசனை சபைகளை அமைக்க முன்வருமாறும்,

முக்கியமாக அவ்வாறு அமைக்கும் ஆலோசனை சபைகளில் தொழிற் சங்கங்களுக்கும் இடமளித்து இந்த ஆலோசனை சபைகள் சிறப்புற இயங்க ஆவன செய்யுமாறு கொருகின்றோம்.

தங்களது பதவிக்காலத்தின் சிறந்ததொரு ஆளுநர் நிருவாகத்தை நம்பிக்கையுடன் நாம் எதிர்பார்ப்பதுடன் எமது தொழிற் சங்கம் தங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை நல்குமென்பதையும் தெரிவிக்கின்றோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொழிற்சங்கங்களை அரவணைத்து செயற்பட முன்வாருங்கள்” புதிய ஆளுநருக்கு ஆலோசனை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)