மீனவ பிரதிநிதிகளுடனான  'சேவ் த லைவ்' ராகுலன் கலந்துரையாடல்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் மாவட்டத்தில் சுற்று சூழல் தொடர்பாக ஏற்கனவே யுஎன்டிபி யினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் சுற்றுச் சூழல் தொடர்பாக மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவை? அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்? என மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய உங்களை அபிப்பிராயங்களை கேட்டு நிற்கின்றோம்மென 'சேவ் த லைவ்' என்ற நிறுவனத்தின் தலைவர் கே. ராகுலன் சேன வினவினார்.

'சேவ் த லைவ்' என்கிற தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக கடற்தொழிலாளர்களுக்கான வாழ்வாதார மேம்பாடு தொடர்பான கூட்டம் புதன்கிழமை (08) மன்னார், மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரிவுகளின் கடற்தொழில் கிராமிய அமைப்பு பிரதிநிதிகளுடன் மன்னார் கடற்தொழில் தலைமை காரியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ராகுலன் சேன இங்கு தெரிவிக்கையில்;

மீனவ சமூகம் தற்பொழுது தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதையிட்டு நாம் இதுதொடர்பாக குறிப்பிடப்படும் மீனவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து வருகின்றோம். இச் சந்திப்பு கடற்தொழில் மட்டும் சம்பந்தமானது அல்ல. மாறாக, சுற்று சூழல் தொடர்புடையமுமாகும்.

சுற்று சூழலில் இன்றையக் காலக்கட்டத்தில் மீனவ சமூகத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் அன்மையில் நடாத்தப்பட்ட சுற்று சூழல் சம்பந்தமான கூட்டத்தில் குறிப்பாக மணல் அகழ்வும் கடலால் மண் அரிப்பும் தொடர்பாக குறிப்பிடப்பட்டது.

சுற்று சூழல் என்பது பொருளாதார விடயமும் உள்ளடக்கப்பட்டதாக தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாங்கள் இப்பொழுது இங்கு கூடியிருப்பதன் நோக்கம் உங்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆராய்ந்து அவற்றிற்கு எவ்வாறன செயல்வடிவம் கொடுக்க முடியுமென முடிவெடுப்பதாக அமையவே.

இதன்போது மீனவ பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது மன்னாரில் கடலோரங்கள் மண் அரிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

இது இவ்வாறு இருக்க மின் காற்றாலை அமைக்கும் நடவடிக்கையால் கிராமங்களுக்குள் வெள்ள அபாயமும் தோன்றியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீனவ பிரதிநிதிகளுடனான  'சேவ் த லைவ்' ராகுலன் கலந்துரையாடல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)