
posted 16th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கௌரவிக்கும் நிகழ்வு
மல்யுத்த விளையாட்டில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு சிறைச்சாலையை முதலிடத்துக்குக் கொண்டு வந்த, மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந. பிரபாகரன் தலைமையில் நேற்று முன்தினம் மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளும், விளையாட்டு வீரர்களும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக தேசிய பயிற்றுவிப்பாளரும், சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், இந்து கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருமான வே. திருச்செல்வம் கலந்துகொண்டார்.
நிகழ்வில் தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய வீரர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ், பணப்பரிசு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இச்சாதனையினை படைப்பதற்காக பயிற்சியை வழங்கிய பயிற்றுவிப்பாளர் வே.திருச்செல்வம் சிறைச்சாலை அத்தியட்சகரினால் கௌரமளிக்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)