posted 14th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சம்யூத்தா தனது இடறல்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றாள். இப்போ வேலையாட்களைத் தூண்டி விடுகின்றாள். கேவலம் பணத்திற்காக ஜனாம்மாவிற்குத் துரோகம் செய்யும் சில ஊழியர்கள்.
- தமிழ் இறுதியாக விளக்கத்தினை குளப்பத்தில் ஈடுபட்டவர்களிடம் சொல்லி தனது முடிவினையும் அறிவித்தாள். ஆடாமல் அசையாமல் வேலைக்குத் திரும்பிய ஊழியர்கள்.
- வலிப்பிழுத்து அவதியுற்ற பிரகாஷ். பிரகாஷ் ஒரு உயிருள்ள மனிதன் என்றும், அவர் தனது மாமனார் என்பது கருத்தில் தமிழுக்கு உள்ளவர் அவர் என்றும், மற்றவர்கள் நினைப்பது போலன்று, என்று மீனாவின் வாயால் சொல்ல வைத்தாள் தமிழ்
- வைத்தியசாலையில் அவதியுற்ற பிரகாஷினைக் காப்பாற்ற வந்தாள், டாக்டர் கீர்த்தி, தமிழின் உற்ற நண்பி. அவவிடம் பிரகாஷினைப் பொறுப்பினைக் கொடுத்தாலும், நடிப்பினால் ஏமாற்றி வந்த கணேஷனின் கனவு ஏப்பமாகியது.
- எல்லாம் நல்லது என்று டாக்டர் கீ்ர்த்தி சொன்னதாகச் சொன்னாலும், கணேஷனில் ஒரு கண் வைத்தாள் தமிழ்.
- கொம்பனிப் பிரச்சினை, பிரகாஷின் சகவீனம் என்றெல்லாம் இருக்கையிலே தமிழிடம் ஜனாம்மா கொடுத்த வேலையானது தடங்கலானதினையிட்டு, வழமை போல சத்தம் போட்டான் சிபீ. எதுவுமே தெரியாமல் சத்தம் போடுவதனையே வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவனாச்சே!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 12.12.2025
குளப்பத்தினையே வேலையாகக் கொண்டவள் சம்யூத்தா. வேலை ஆட்கள் சிலருக்கு பணத்தினைக் கொடுத்து Factoryறியினுள் கலவரத்தினை உண்டாக்கினாள். ஏனென்றால் இந்த ஊழியர்களின் பிரச்சினையில் தமிழின் நேரம் அதில் போகட்டும் என்றும், இதனால், தமிழுக்குக் கெட்ட பெயர் வரட்டும் என்றும் திட்டத்தினைப் போட்டாள், சம்யூத்தா.
வேலை செய்பவர்களில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். செய்யும் வேலையினை தொப்பென்று போட்டுவிட்டு அடிதடியில் இறங்கினார்கள், சம்யூத்தாவின் காசினையும், அவளின் வாக்குறுதியினையும் நம்பி.
ஆனால், அவளோ எத்தனை நாட்கள்தான் இருப்பாள் என்று தெரியாது, அதற்கிடையில் அவளுக்கு ஒரு வாக்குறுதி ஒரு கேடா என்று நினைக்கத் தோன்றுகின்றது. இதற்கான பணம் அவளுடையதல்ல, ஏனென்றால், அவளிடம்தான் பணமே இல்லையே! இதற்கும் அவள் சிபீயிடம் கொம்பனிக் கணக்கில் இருந்து எடுத்திருக்கின்றாள் போலும். தன் விரலாலேயே அவரவர் கண்களினைக் குத்துவது போல.
தமிழுக்குக் கதை எட்டியது. இதில் உள்ளவர்கள் இப்போது வேலைக்குப் போகாவிடில், அனைவரையும் வேலையினை விட்டு தூக்கி விடுவேன். இது தமிழின் இறுதியானதும், உறுதியானதுமான வாக்குறுதியாக இருந்தது. அடங்கிப் போய் அனைவரும் வேலைக்குத் திரும்பினர்.
ஜனாம்மா, வேலை செய்பவர்கள் அனைவரையும் தனது குடும்ப அங்கத்தவர்களாகத்தான் பார்க்கின்றா. அத்துடன், அவர்களது குடும்பங்களில் மிக்க கவனமும், அக்கறையும் கொள்கின்றா. ஆனால், நீங்கள் அதற்கு மரியாதை கொடுப்பது போன்று தெரியவில்லையே என்பது தமிழின் கருத்து.
ஆனால், இந்த ஊழியர்கள் நேற்று வந்த சம்யூத்தாவின் வார்த்தையினையும், அவள் கொடுத்த பணத்தினையும் நம்பி ஜனாம்மாவிற்கே துரோகம் செய்யத் துணிந்துள்ளனர் என்றால், இவர்கள் பிறப்பிலேயே துரோகிகளாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றுகின்றது. இவர்களைத் தமிழ் அடையாளம் பண்ணி வைத்திருப்பாள். இதன் பின்னணி என்ன என்றும் கண்டுபிடிப்பாள். CCTV Footageஜினையும் எடுப்பாள். அத்தனை பேர்களையும், சம்யூதாவுடன் சேர்த்து வேலையினை விட்டுத் தூக்குவாள், ஆதாரங்களின் அடிப்படையில். அதுவும், சிபீயை வைத்தே செய்வாள் தமிழ்.
சம்யூத்தா யாரை நம்பி உங்களை வேலையினை விட்டுத் தூக்கினாலும், நான் உங்களை மீண்டும் கூட்டி வருவேன் என்று சத்தியம் பண்ணியதற்குக் காரணம், சிபீதான். ஆகவேதான், சிபீயை வைத்தே அவர்களை வேலையினை விட்டுத் தூக்குவாள் தமிழ்.
தமிழின் இந்த நடவடிக்கையினை இட்டு ஜனாம்மா சந்தோஷப்படுவா. ஆனால், மிகுதியான வேலையாட்கள் அனைவரும் நடுங்குவார்கள்.
திடீரென பிரகாஷிற்கு வலிப்பு ஏற்பட்டது, கணேஷன் போட்ட ஊசியினால். எல்லாரும் துடித்துப் போனார்கள், கணேஷன் உட்பட. கணேஷனின் நடிப்பு எல்லாரையும் தோற்கடித்தது. ஆனால், தமிழோ இந்த நடிப்பில் சந்தேகப்பட்டாள். இவர் ஏன் எல்லாவற்றிலேயும் தலையினைப் போடுகின்றார். தான்தான் பிரகாஷினைத் தலையில் தூக்கி வைத்துள்ளது போன்று குரல் உசத்துகின்றார். எங்கேயோ உதைத்தது தமிழுக்கு.
அதிஷ்ர வசமாக கீர்த்தியும், தமிழும் சந்தித்தார்கள். கீர்த்தி இந்த வைத்தியசாலையில் உள்ளவர்களில் மிகவும் பிரபல்யமான டொக்டர் என்று ஜனாம்மாவிற்கு அடையாளப்படுத்தி அவவையே பிரகாஷை இனிப் பார்ப்பதற்கு ஜனாம்மாவிடமும், மீனாவிடமும் அனுமதியினையும் வாங்கினா, தமிழ். இதிலும் கணேஷனோ இடைமறித்தான். இதனாலேயும், தமிழுக்கு இன்னமும் சந்தேகம் கூடியது.
இவ்வளவு வருட காலமாகக் கொடுத்து வந்த மருந்துகள் அனைத்தும் மிகவும் நல்லவையல்ல என்றும், இவை slow poison என்றும் தமிழுக்கு விளங்கப்படுத்தினா, கீர்த்தி. அத்துடன், இவ்வளவு காலமும் பார்க்கும் டொக்டரையே பார்க்க வைக்கலாம் என்று மிகவும் கட்டாயப் படுத்திய கணேஷனில் தமிழுக்கு மேலும் சந்தேகம் வந்தது.
புதிதான மருந்துகள் மாற்றப்பட்டன. ஆனால், கீர்த்தி கொடுத்த மருந்துகளில் எதிர்பார்க்கும் அளவிற்கு மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே சந்தேகத்தின் அடிப்படையில், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படலாம். மேலும், பிரகாஷின் அறையினுள் இரகசிய CCTV பூட்டப்படலாம். யார், யாரெல்லாம் பிரகாஷன் அறையினுள் வருகின்றார்கள் என்றும், அவரவர் என்னென்ன செய்கின்றார்கள் என்பதனையும் கண்டு பிடிப்பதற்காக.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!