
posted 3rd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார்.
திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனினால் சமகால அரசியல் விடயங்கள், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் மூலம் எவ்வாறு அரசியலை நகர்த்தலாம் என்ற விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)