மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்த எடுத்தவரும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவில் களியமண் அகழ்வு, உயர்மின்வலு காற்றாடிகள், தரமற்றவீதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலின் தளமாக மன்னாரை மாற்றியும் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்துவதும், ஏனைய இடங்களில் சுற்று சூழலை அழிப்பதுமான திட்டத்தை வன்மையாக கண்டித்து மன்னாரில் திங்கள் கிழமை (31.01.2022) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் பலர் மன்னார் பிரஜைகள் குழுவுக்கு தொடர்ச்சியாக முறையீடு செய்து வருவதைத் தொடர்ந்து மன்னார் மக்கள் நலன் நோக்கி இக் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான முஸ்தீப்பை மன்னார் பிரஜைகள் குழு மேற்கொண்டுள்ளது.

இக் கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார் நகரில் மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவு சிலைக்கு முன்பாக இருந்து புறப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இருந்து இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து பலரும் இதில் கலந்து கொள்வதற்கான எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் தெரிய வருகின்றது.

மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்த எடுத்தவரும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House