
posted 29th January 2022
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளார் செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியா பேர்த் நகரில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உயிரை மாய்த்த தந்தை தனது 6 வயது மகனையும் 4 வயது மகளையும் கொலை செய்துள்ளார் என ஆஸ்திரேலிய பொலிஸாரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் நகர்ப்புற அழகுக்கலை வல்லுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு, அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது முகநூலில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
தன்னைக் கவனித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள் நான் மனச்சோர்வடைந்திருப்பதாக நினைக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் சமீபத்தில் எனக்கு மனச்சோர்வு இருப்பது கண்டறியப்பட்டது.
என் உடல்நிலைக்கு மருந்து எடுத்து வருகிறேன். மனநலப் பிரச்சனைகள் அல்லது மனச்சோர்வினால் ஏற்படும் நிலைமைகள் உங்களை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
தற்கொலை தீர்வல்ல. கடினமான முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள். அனைவருக்கும் கருணை காட்டுங்கள் ” என்று தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 40 வயதான இலங்கையர் காணொளியில் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் இலங்கையரின் மனைவி, தனது இரு குழந்தைகளையும் அழைத்து வருவதற்கு முன்னர் குறித்த இடத்துக்குச் சென்றிருந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் அவ்விடத்துக்கு வராததால் அவர்களைக் கண்டுபிடிக்க தனது நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House