
posted 31st January 2022
அரசானது மன்னார் மக்களின் நலன் நோக்காது இங்குள்ள மணலை அகற்றும் நிகழ்ச்சி திட்டத்தை முன்னெடுத்து வருவதை மன்னார் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
திங்கள் கிழமை (31.01.2022) மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் கலந்துகொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
இந்த நாட்டில் எமது மண்ணை அபகரிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த தேசமானது இங்குள்ள மக்களை நிலைகளை பற்றிச் சிந்திக்காது தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
ஆகவே, எமது பிரதேசத்தை, எமது மாவட்டத்தை காப்பாற்றுவது எமது மாவட்டத்தைச் சார்ந்த ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் பொறுப்புண்டு என்பதை நாம் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
ஆகவே எமது மாவட்ட ஒவ்வொரு பிரஜையும் உணர்வு பூர்வமாக உணர்ந்து இவ்வாறான பிரச்சனைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அதாவது எமது மண்ணையும் மாவட்டத்தையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ஒன்றுபட்டு அனைவருமாகக் கலந்துகொள்ள வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் என அறைகூவல் விடுத்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B