
posted 3rd February 2023
வவுனியாவில் வெள்ளிக்கிழமை (03) பெய்த கனமழையால் 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்தனர். 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமனாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் வவுனியா நகரில் நேற்று முன்தினம் காலை முதல் 24 மணி நேரத்தில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)