கொரொனாத் தொற்று அப்டேற் (09.02.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். போதனா வைத்தியசாலையில் பெண்கள் 11 பேர் உட்பட மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வுகூடங்களில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்கள் 11 பேர் உட்பட 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் உயிரிழந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டிருந்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அமிர்தவல்லி - பத்மநாதன் (வயது-75) என்ற மூதாட்டிக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரொனாத் தொற்று அப்டேற் (09.02.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House