நிதி ஒதுக்கீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் முக்கிய பிரதேசமான அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் முக்கிய தேவைகள் பல திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பைசால் காசிமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன் ஆலய தலைவர் கே.கோபாலன் தலைமையில் அங்குள்ள முக்கிய அமைப்புக்கள் பின்தங்கிய தமது பிரதேசத்தின் தேவைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் பயனாக அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இயங்கும் அறநெறிப்பாடசாலை நிர்மாணத்திற்கான வேலைத்திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பத்து இலட்சம் ரூபாவினையும், அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய மண்டப நிர்மாணப் பணிக்கென பத்து இலட்சம் ரூபாவினையும் உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளார்.

அத்தோடு எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு தாம் நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அட்டப்பள்ளம் பிரதேசத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் அங்கு பூர்த்தியடையாத நிலையில் உள்ள அறநெறிப்பாடசாலை கட்டிடத்தை நேரில் சென்று ஆலய தலைவர் மற்றும் பொது மக்கள் சகிதம் பார்வையிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தமது கோரிக்கையினை ஏற்று முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளமைக்கு மேற்படி ஆலய தலைவர் கோபாலன் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

நிதி ஒதுக்கீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House