கிழக்கில் மழை வெள்ளம் - பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கில் மழை வெள்ளம் - பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை

கிழக்கிலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் பெரும் மழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்ந்த பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சில பிரதேசங்களில் மக்கள் குடியிருப்பு வீடுகளை விட்டும் மக்கள் வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் இந்த மழை அனர்த்தம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு, கடல் பெருக்கம் ஏற்பட்டுள்ளதால் கடற் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடல் மீன்படி முற்றாக பாதிக்கப்பட்டு மீனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பல்வேறு பிரதேசங்களிலும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாயக் காணிகளில் மழை வெள்ளம் தேங்கி இம்முறை விவசாயச் செய்கை பாதிப்படையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பல உள்ளுர் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதுடன் விசேடமாக காரைதீவு கந்தசாமி ஆலய வளாகம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு காணப்படுகின்றது.

கிழக்கில் மழை வெள்ளம் - பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)