புதிய பெண் உறுப்பினர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய பெண் உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பட்டியல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த எம்.ரி.பஸ்பிகா என்பவரே புதிய உறுப்பினராகக் கட்சியின் சிபார்சில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பதிய உறுப்பினர் பஸ்பிகா பதவியேற்புக்காக நிந்தவூர் பிரதேச சபைக்கு வருகை தந்தபோது கட்சி பேதங்களின்றி சக உறுப்பினர்கள் சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் வரவேற்பளித்தனர்.

இதனையடுத்து பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் புதிய உறுப்பினராக பஸ்பிகா பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், தொடர்ந்து நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலும் கலந்து கொண்டார்.

இதன்போது சபை அமர்வில் தவிசாளர் தாஹிர் உட்பட உறுப்பினர்கள் பலரும் புதிய உறுப்பினரை வரவேற்று உரையாற்றினர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிந்தவூர் பிரதேச சபைக்கு பட்டியல் வேட்பாளர்களையும் உறுப்பினர்களாக்கும் எடுத்துக்காட்டான செயற்பாட்டை முன்னெடுத்துவருவது குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

புதிய பெண் உறுப்பினர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House